Thursday, May 7, 2009

புளியோதரை

தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 5 கப்
நல்லெண்ணை - 50 கிராம்
மிளகு - 200 கிராம்
புளிக்காய்ச்சல் தயாரிக்கபுளி - 100 கிராம்
நல்லெண்ணை - 100 கிராம்
கடலைப் பருப்பு - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
வேர்க்கடலை-50 கிராம்
கடுகு - 10 கிராம்
பெருங்காயம் - சிறிது
முந்திரிப்பருப்பு - 50
கிராம்உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் - 10 கிராம்
செய்முறை:
· புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
· நல்லெண்ணைய வாணலியில் வைத்து,எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும். 5 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். அதன் பிறகு வேர்க்கடலை மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து வறுக்கவும்.
· புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும்.
· மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
· சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
· பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.


No comments:

Post a Comment