உருளைக்கிழங்கு குழம்பு
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 4
தேங்காய் - 1 மூடி
பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
உப்பு - 4 தேக்கரண்டி
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து தோலுரித்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காய், கசகசா, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், சோம்பு, தக்காளி ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளையும், அரைத்து வைத்துள்ள விழுதினையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்தவுடன் சிறிது உப்பு சேர்த்து இறக்கிவிட வேண்டும்.
செட்டிநாடு சிக்கன்
தேவையான பொருட்கள்:
கோழி (1/2 கிலோ),
பெரிய வெங்காயம் (2
தக்காளி (1)
இஞ்சி (1"),
பூண்டு (4 பல்) தட்டிக் கொள்ளவும்.
மசாலா பொடி தயாரிக்கும் முறை:
வற்றல் மிளகாய் (4)
மிளகு (1/4 தேக்கரண்டி)
தனியா (1 1/2 தேக்கரண்டி)
சீரகம் (1 தேக்கரண்டி)
பட்டை (1"),
ஏலக்காய்(2)
கிராம்பு (3),
செய்முறை:
வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொள்ளவும்
தேங்காய் துருவல் (1 1/2 மேசைக் கரண்டி) சேர்த்து அரைத்து உபயோகிக்கவும்).
வாணலியில் 50 கிராம் எண்ணை ஊற்றி., பட்டை (1/2"), கிராம்பு (2), கறிவேப்பிலை சிறிது போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் சிக்கன் கலவையைச் சேருங்கள்.இத்துடன் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து சிக்கனை நன்றாக வேக வையுங்கள். எண்ணை மிதந்ததும் இறக்கவும்.
பக்கோடா குழம்பு
தேவையானப் பொருட்கள்:
அரிசி மாவு - ஒரு குழிகரண்டி
கடலை மாவு - 3 குழிகரண்டி
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
புளி - கோலிகுண்டு அளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அரிசிமாவு, கடலை மாவு, உப்பு, நறுக்கின வெங்காயத்தில் பாதி சேர்த்து தண்ணீர் விட்டு கட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடான பின்பு, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரித்து, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு மீதமுள்ள நறுக்கின சிறிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.வதங்கிய பிறகு வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். அத்துடன் ஒன்றரை கரண்டி மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு புளிகரைசல் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கலக்கவும். ஒரு கொதி வந்தவுடன் செய்து வைத்துள்ள பக்கோடா சேர்த்து சற்று நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
கத்தரிக்காய் புளிக்குழம்பு
தேவையானவை :
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - 3 நடுத்தர அளவு
வெங்காயம் - பெரியது 1 / சின்னது 10
குழம்பு மசாலா - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3/4
கத்தரிக்காய் - 2/3
தேங்காய் - 3 பத்தை
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.
2. தக்காளி, வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும்.
3. தேங்காயை மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையுடன் நறுக்கிய வெங்காயம், கத்தரிக்காய், மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
5. தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
6. புளியை நன்றாக நீரில் கரைத்து அந்தத் தண்ணீரை வதக்கிய கலவையுடன் சேர்க்கவும்.
7. குழம்பு மசாலாவை இந்தக் கலவையுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.
8. அப்புறம் அரைத்த தேங்காயை குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் புளிக்குழம்பு தயார். சோறு, இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.
குறிப்பு : இதே போல கத்தரிக்காய்க்குப் பதில் வெண்டைக்காயையும் சேர்த்துப் புளிக்குழம்பு வைக்கலாம்.
மங்களூர் போண்டா
• கடலை மாவு - 1 மேசைக்கரண்டி,
• அரிசி மாவு - 1/4 கிலோ,
• டால்டா - 50கிராம்,
• பச்சை மிளகாய் - 6,
• சின்ன வெங்காயம் - 15,
• கறிவேப்பிலை - 10,
• கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது),
தயிர் 2 டீபூன்
• உப்பு - தேவையான அளவு,
• எண்ணெய் - பொரிக்க.
செய்முறை
• வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடலை மாவு, அரிசி மாவு,தயிர் 2 டீபூன் , வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை, கொத்தமல்லி, எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
• டால்டாவை சூடு செய்து மாவில் நன்கு கலக்கவும்.
• லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
• எண்ணெயை காய வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு, பொரித்து எடுக்கவும்.
புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - 1 கப்,
சிறிய புடலங்காய் - 1,
பெரிய வெங்காயம் - 1,
காய்ந்த மிளகாய் - 3,
சீரகம் - 1 தேக்கரண்டி,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - 1 மேஜைக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
புடலங்காயை அரை அங்குல நீள துண்டுகளாக நறுக்கவும்.
கடலைப்பருப்புடன் புடலங்காய், வெங்காயம், தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வெறும் வாணலியில் சீரகம், மிளகு(optional), வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
குக்கரை திறந்து, அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
காரக்குழம்பு
தேவையான பொருட்கள் :
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 6 பல்
கருவேப்பில்லை – 4 இலை
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கடுகு – ½ தே.கரண்டி
வெந்தயம் – 1 /2 தே.கரண்டி
நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் – ¼ தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – 1 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளியை வெட்டி கொள்ளவும்.
பூண்டினை தோல் உரித்து வைக்கவும்.
புளியினை தண்ணீருடன் சேர்த்து கரைத்து வைக்கவும்.
பின்பு கரைத்து வைத்துள்ள புளி கரைசலுடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து திரும்பவும் நன்ராக கரைக்கவும்.
முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். பின்பு வெந்தயம் போட்டு பூண்டினை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் , கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைச்சலை இதில் ஊற்றி தட்டு போட்டு முடி நன்றாக 15 நிமிடம் வேகவிடவும்.
இப்பொழுது காரக்குழம்பு ரெடி.
காரக்குழம்பு
தேவையான பொருட்கள் :
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 6 பல்
கருவேப்பில்லை – 4 இலை
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கடுகு – ½ தே.கரண்டி
வெந்தயம் – 1 /2 தே.கரண்டி
நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் – ¼ தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – 1 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளியை வெட்டி கொள்ளவும். புளியினை தண்ணீருடன் சேர்த்து கரைத்து வைக்கவும். பின்பு கரைத்து வைத்துள்ள புளி கரைசலுடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து திரும்பவும் நன்ராக கரைக்கவும்.
முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். பின்பு வெந்தயம் போட்டு பூண்டினை சேர்த்து வதக்கவும். அதன் பின் வெங்காயம் , கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைச்சலை இதில் ஊற்றி தட்டு போட்டு முடி நன்றாக 15 நிமிடம் வேகவிடவும். இப்பொழுது காரக்குழம்பு ரெடி.
மணத்தக்காளி வற்றல் குழம்பு
தேவையான பொருட்கள் :
மணத்தக்காளி வற்றல் - 3 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - 2
நல்லெண்ணெய் - 3டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
வற்றல் குழம்பு பொடி - 2 அல்லது 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் மணத்தக்காளி வற்றலைப் போட்டு பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். மீதி எண்ணெயை விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து புளியை கெட்டியாகக் கரைத்து விட்டு, உப்பு, மஞ்சள் பொடி, வற்றல் குழம்பு பொடி போட்டு கொதிக்க விடவும். பச்சை வாசனை போக நன்கு கொதித்ததும், அரிசி மாவைக் கரைத்து விட்டு கொதிக்கவிட்டு சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து பொரித்த மணத்தக்காளியைச் சேர்க்கவும்.
வத்தல் குழம்பு
தேவையான பொருட்கள் :
புளி - ஒரு பெரிய எலும்மிச்சம் பழம் அளவு
சாம்பார் பொடி - காரமான பொடியாக இருந்தால் 11/2 தே கரண்டி போதும்.
பெருங்காயம்
உப்பு
வத்தல்/காய்கறி/வேர்கடலை/கொண்டை கடலை/சுண்டைக்காய் - ஏதாவது ஒன்று
கரிவேப்பிலை - ஒரு கொத்து
நல்லெண்ணை - 5 தே கரண்டி
செய்முறை :
புளியை சிரிது சுடு தண்ணீர் விட்டு, ஊர வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து, புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில், நல்லெண்ணை விட்டு, கடுகு, கடலை பருப்பு, கரிவேப்பிலை, பெருங்காயம்,போட்டு, பிறகு வத்தல்/காய்கறி/வேர்கடலை/கொண்டை கடலை/சுண்டைக்காய் ஏதாவது ஒன்று போட்டு சிறிது வருத்த பிறகு, சாம்பார் பொடி போட்டு சிறிது வாசனை வரும் வரை வருத்து புளித்தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.நன்கு கொதித்து வத்தி கெட்டியா வந்த பிறகு இறக்கவும்.
• புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
• அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, முதலில் வற்றலை வறுத்துக் கொள்ளவும்.
• அதன்மேலே கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்துத் தாளிக்கவும்.
• மேலே வற்றல் குழம்புப் பொடியைப் போட்டு வறுத்துக் கொண்டு, புளிநீரைச் சேர்க்கவும். (வாசனை தூக்குகிறதா?)
• உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கெட்டியாக இறுகி, பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
• விரும்பினால் இறக்கும் முன் ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கவும்.
சுரைக்காய் கூட்டு
தேவையான பொருட்கள் :
சுரைக்காய்நறுக்கியது -1கப்
பாசிபருப்பு -1/2கப்
சின்னவெங்காயம் -5
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை -1கொத்து
தக்காளி -1சிறியது
எண்ணை -1ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்
சீரகம் -1/2ஸ்பூன்
பூண்டு -4பற்கள்
மஞ்சள்பொடி -1/2ஸ்பூன்
சாம்பர்பொடி -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம்,மிளகாய்,தக்காளி நறுக்கிவைக்கவும்.பூண்டை தட்டிவைக்கவும்.
பருப்பை சிறிதுநேரம் வருத்து வேகவைக்கவும்.
பாதி வெந்தவுடன்,சுரைக்காய் போட்டு,மஞ்சள்பொடி,தக்காளி போட்டு வேகவிடவும்.உப்பு சேர்க்கவும்.
மற்றொரு வாணலியில்,எண்ணை ஊற்றி கடுகு,சீரகம் தாளித்து,வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கி,தட்டிய பூண்டு போடவும்.
பச்சை வாசனை போனவுடன் வெந்த பருப்பில் கொட்டவும்.சாம்பார்பொடி போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.
பீர்க்கங்காய் தக்காளி கூட்டு
தேவையான பொருட்கள் :
பீர்க்கங்காய் - 1
தக்காளி - 2
பாசிப் பருப்பு - 2 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
தேங்காய்ப் பூ - 4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
சீரகம் - 3/4 ஸ்பூன்
பூண்டு - 1 பல்
தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை
செய்முறை :
பீர்க்கங்காயை, தோல் சீவி, சிறிய சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியையும் கழுவி விட்டு, சிறிய சதுரங்களாக நறுக்கவும்.
தேங்காய்ப் பூ, சீரகம், பச்சை மிளகாய், பூண்டு மிக்ஸியில் அரைக்கவும்.
குக்கரின் மேல்பாத்திரத்தில் கடலைப் பருப்பு, பாசிபருப்பு இரண்டையும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, பின் அதன் மேல் நறுக்கிய பீர்க்கங்காய், தக்காளியை பரத்தினாற் போல போட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய், மிளகாய் கலவையையும் அதன் மேலே சேர்க்கவும்.
வெந்து இறக்கிய பின், உப்பு சேர்க்கவும்.
கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளிக்கவும்.
புடலங்காய் பாசி பருப்பு கூட்டு
தேவையான பொருட்கள் :
புடலங்காய் - கால் கிலோ
பாசி பருப்பு - அரை கப்
உப்பு - தேவைக்கு
வருத்து பொடிக்க :
எண்ணை - ஒரு தேக்கரண்டி
உளுந்து - இரண்டு மேசை கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - இரண்டு பத்தை
மிளகு - 9
காஞ்ச மிள்காய் - 2
கருவேப்பிலை - ஒரு ஆர்க்
செய்முறை :
புடலங்காயை கழுவி தோலெடுத்து பொடியாக நருக்கவும்.
பாசி பருப்பை லேசாக வருத்து ஐந்து நிமிடம் ஊற வைத்து களைந்து அத்துடன் புடலங்காய் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.
வருத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வருத்து ஆறியதும் மிக்சியில் பொடித்து வெந்த புடலங்காயுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பரங்கிக்காய் சிவப்புக்காராமணி கூட்டு
தேவையான பொருட்கள் :
பரங்கிக்காய்-1துண்டு
சிவப்பு காராமணி-1/2கப்
உப்பு-தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல்-1/4கப்
சின்னவெங்காயம்-3
மிளகாய் வற்றல்-2
மிளகு-1/2 தேக்கரண்டி
சீரகம்-1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய்-1மேசைக்கரண்டி
தேங்காய் துருவல்-2மேசைக்கரண்டி
கடுகு-1தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1/2மேசைக்கரண்டி
கறிவேப்பிலை-2கொத்து
செய்முறை :
சிவப்பு காராமணியை ஊறவைத்து குக்கரில் குழையாமல் வேக வைக்கவும்.
பரங்கிக்காயை துண்டுகளாக்கி உப்பு கறிவேப்பிலை சேர்த்து வேக விடவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்கலை தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைக்கவும்.பரங்கிக்காய் வெந்ததும் வேக வைத்த காராமணி,அரைத்த தேங்காய் கலவை சேர்த்து கொதிக்கவிடவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து தேங்காய் துருவல் சேர்க்கவும்.
தேங்காய் துருவல் பொன்னிறமானதும்.பூசனிக்காய் கூட்டில் சேர்த்து கிளறி இறக்கவும்.
வாழைப்பூ கூட்டு
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பச்சமிளகாய் - இரண்டு
தேங்காய் துருவல் - இரண்டு டேபுள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தே. அளவு
தாளிக்க
எண்ணை - இரண்டு டேபுள் ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காஞ்ச மிளகாய் - இரண்டு
பூண்டு - இரண்டு தட்டியது
உளுத்தம் பருப்பு
கருவேப்பிலை - சிறிது
செய்முறை :
துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் மலர வேகவைக்கவும்.
எண்ணையை காய வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி, உப்பு, பச்ச மிளகாய் கீறி போட்டு வாழைப்பூவை சேர்த்து வதக்கவும்.கடைசியில் தேங்காய் பூ வெந்த பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
வாழைத்தண்டு கூட்டு
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு -ஒன்று
வெங்காயம் -ஒன்று
பாசிபருப்பு -ஒருகப்
பச்சைமிளகாய் -இரண்டு
கருவேப்பிலை -ஒருகொத்து
பெருஞ்ஜீரகத்தூள் -ஒருடேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -ஒருடேபிள்ஸ்பூன்
தேங்காய்பால் -அரைகப்
எண்ணெய் -தாளிக்க
உப்பு -ஒருடேபிள்ஸ்பூன்
செய்முறை :
வாழைத்தண்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கு உப்பு கலந்த தண்ணீரில் போட்டு கழுவி எடுக்கவும்
பருப்பை நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேபிலை போட்டு தாளித்து அதில் மிளகாய் பெருஞ்ஜீரகத்தூள் மஞ்சள்தூள் போட்டு கிளறி வாழைப்பூவை போட்டு ஒருடம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
வெந்ததும் வேகவைத்த பருப்பை போட்டு கிளறி தேங்காய் பால் ஊற்றி திக்காக வந்ததும் இறக்கவும்
அவியல்
தேவையான பொருட்கள் :
முருங்கைக்காய் - 2
பூசணிக்காய் - அரை கீற்று
சேனைக்கிழங்கு - 100 கிராம்
கத்திரிக்காய் - 100 கிராம்
கொத்தவரங்காய் - 100 கிராம்
வாழைக்காய் - ஒன்று
காரட் - ஒன்று
சின்ன வெங்காயம் - 6
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 6
மாங்காய் - 4 துண்டுகள்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை :
முருங்கைக்காயை ஒன்றரை அங்குல நீளத்துண்டுகளாகவும், வாழைக்காய் தவிர மற்ற காய்களை அரை அங்குல நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாழைக்காயின் மேல் தோலைச் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளுடன் உப்பு, தேவையான நீர் சேர்த்து வேக வைக்கவும். காய்கள் அரைப்பதத்தில் வெந்ததும் மாங்காய் துண்டுகள் சேர்த்து கிளறி மூடி வைத்து முக்கால் பதமானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடவும்.
தேங்காய்த் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொண்டு, கடைசியில் சாம்பார் வெங்காயம் ஒன்றிரண்டாக தட்டி எடுக்கவும்.
அரைத்தவற்றை காய்கறியில் போட்டு நன்கு கிளறி மறுபடியும் அடுப்பில் வைத்து வேக வைத்து, கலவை நீர்க்க இல்லாமல் கெட்டிப்பட்டதும் இறக்கி விடவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தாளித்ததை அவியலில் கொட்டிகிளறி இறக்கவும். கடைசியில் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
கோஸ் பொரியல் (Microwave)
தேவையான பொருட்கள் :
1. கோஸ் - 1/4 கிலோ
2. பச்சை மிளகாய் - 3
3. தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. உப்பு - ருசிக்கு
6. தாளிக்க: கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் -
செய்முறை :
கோஸ் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் கீரவும். இவற்றை மஞ்சள் தூள் சேர்த்து மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து மூடியிட்டு 4 நிமிடம் HI'ல் வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளித்து, கோஸ்'ல் சேர்க்கவும்.
தேங்காய் துருவல், உப்பு'ம் கலந்து விடவும்.
மீண்டும் மைக்ரோவேவ் HI'ல் 4 (அ) 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.
கேரட்,பீன்ஸ் பொரியல்
தேவையான பொருட்கள் :
கேரட் - 1 கப் (பொடியாகாக நறுக்கியது)
பீன்ஸ் - 1 கப் (பொடியாகாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 கப் (பொடியாகாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 1 (பொடியாகாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 3/4 டீஸ் ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
கடலைமாவு - 1 டீஸ் ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கீற்று
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்
அடுத்து வெங்காயம், பச்சைமிளகாய், கேரட் மற்றும் பீன்ஸையும் போட்டு நன்றாக வதக்கவும்.
நன்றாக காய் வதங்கியதும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடிப்போட்டு வேகவைக்கவும். அடுத்து மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், உப்பு தூவி கிளறி மூடிவைத்து 2 நிமிடம் பொருத்து கடலை மாவைத் தூவி கிளறி இறக்கவும்.
பீட்ரூட் மசால் பொரியல்
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் - 2
மல்லித்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
அரைக்க: தேங்காய்த்துருவல் - 1 1/2 கப்
வத்தல் மிளகாய்- 2
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/4 டீஸ் ஸ்பூன்
தாளிக்க: எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கீற்று
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
பீட்ரூட்டை பொடியாக நறுக்கி உப்பு போட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்
தேங்காய்த்துருவல்,வத்தல்மிளகாய்,மஞ்சள்த்தூள்,பெருஞ்சீரகம் இவற்றை கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை போட்டு தாளித்து
ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அதில் அரைத்துவைத்துள்ள மசாலையும் சேர்த்து கிளறவும்.
பின்னர் வெந்த பீட்ரூட்டை சேர்த்துப்பிரட்டி இறக்கவும்
கோஸ் பாசிப்பருப்பு பொரியல்
தேவையான பொருட்கள் :
முட்டை கோஸ் - 200 கிராம்
பாசிப்பபருப்பு - 50 கிராம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1டீஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 2
பச்சை மிளகாய் - 2
மல்லி இலை,கருவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல்- 3 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
செய்முறை :
பாசிப்பருப்பை ஊறவைத்து அதுமூழ்கும் அளவு தண்ணீர் வைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து முக்கால் வேக்காடு வெந்து எடுக்கவும்,உதிரியாக இருக்கும்.வெங்காயம், கோஸை மெலிதாக கட் செய்து கொள்ளவும்.மல்லி,மிளகாயை கட் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு,வற்றல்,மிளகாய்,கருவேப்பிலை,வெங்காயம் தாளிக்கவும்.
பின்பு கோஸ் சேர்த்து வதக்கவும்,வதங்கியவுடன் உதிரியாக வெந்த பாசிப்பருப்பு சேர்த்து பிரட்டவும்,உப்பு சேர்க்கவும்,தேங்காய் துருவல் சேர்க்கவும்,மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான கோஸ் பாசிப்பருப்பு பொரியல் ரெடி.
No comments:
Post a Comment