Monday, July 19, 2010

குழம்பு

-


துவரம்பருப்பு மசியல்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - 2, பச்சை மிளகாய் - 3, புளி - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி, அதனை தாளிப்பில் சேர்க்கவும். அது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்து மசித்த துவரம்பருப்புக் கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வாசனை வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

வெந்தய மசியல்

தேவையானவை: வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு கலவை - அரை கப், காய்ந்த மிளகாய் - 6, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளி - 50 கிராம், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை பருப்புகள், வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு, வறுத்தவற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும். ஆவி போனதும் குக்கர் மூடியைத் திறந்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு... கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி, பரிமாறவும்.

வத்தக் குழம்பு

தேவையானவை: சின்ன வெங்காயம் - ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - 50 கிராம், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து... தோல் உரித்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வாசனை வந்ததும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, வடிகட்டிய புளிக் கரைசல் விட்டுக் கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில், பொடித்த வெல்லம் போட்டுக் கலந்து, கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும்.

இந்தக் குழம்பு இரண்டு நாட்கள் வரை கூட நன்றாக இருக்கும்.

மாந்தோல் குழம்பு

தேவையானவை: மாங்காய்த் தோல் (உப்பு போட்டு ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்தது) - கால் கப், புளி - சிறிதளவு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன். கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கொதிக்கும் நீரில் மாங்காய்த் தோலை போட்டு அரை மணி நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, மிளகு போட்டு வறுத்து... அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி, அதில் உப்பு, பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு, ஊற வைத்த மாங்காய்த் தோல், பொடித்த வெல்லம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த கலவையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

பொரிச்ச குழம்பு

தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், பெருங்காயத்தூள், கடுகு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக விடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து... ஆற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேக வைத்த பருப்புடன் அரைத்த கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

வெந்தயக் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - சிறு துண்டு, பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், புளி - 50 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன். உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை பருப்புகள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளியைத் தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து, வடிகட்டி தாளிப்பில் சேர்க்கவும். மஞ்சள்தூள், பொடித்த வெல்லம், உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். அரிசி மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, அதில் சேர்த்து மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.

மோர்க் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 5, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், புளிப்பில்லாத கடைந்த மோர் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சுண்டைக்காய் - 15, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு, வெந்தயம் சேர்த்து வறுக்கவும். பிறகு, பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு சேர்த்து நன்கு வதக்கி... இஞ்சி, கொத்தமல்லி, தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு அதனுடன் கடைந்த மோர் சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் சுண்டைக்காயை சிவக்க வறுத்து மோர்க் கலவையில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி நன்கு கலந்து பரிமாறவும்.

மிளகு குழம்பு

தேவையானவை: மிளகு - கால் கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், புளி - 50 கிராம், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், அரிசி - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் அரிசியை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து, நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு... புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயத்தில் பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து இறக்கவும்.

பாசிப்பருப்பு மசியல்

தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், நறுக்கிய தக்காளி - கால் கப், பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 2, புளி - 50 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள், கடுகு - தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி... புளிக் கரைசல், உப்பு சேர்த்து கலக்கவும். அது கொதித்ததும், வேக வைத்து மசித்த பாசிப்பருப்பைப் போட்டு மீண்டும் ஒருமுறை கொதிக்க விடவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

சுண்டைக்காய் வற்றல் குழம்பு

தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் - கால் கப், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், புளி - 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு மூன்றையும் வறுத்து... அதனுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சுண்டைக்காய் வற்றலை போட்டு வறுக்கவும். புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொடித்த வெல்லம் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த கலவையை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

கறிவேப்பிலை குழம்பு

தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கப், புளி - 50 கிராம், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு போட்டு வறுத்து ஆற வைக்கவும். வறுத்தவற்றுடன் கறிவேப்பிலை, புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து... அரைத்த கறிவேப்பிலை கலவையைப் போட்டு, தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் இறக்கி விடவும்.

மொச்சைக் குழம்பு

தேவையானவை: காய்ந்த மொச்சை - அரை கப், புளி - 50 கிராம், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே மொச்சையை ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து... வேக வைத்த மொச்சையில் பாதியளவு சேர்க்கவும். பிறகு, புளியை ஊற வைத்துக் கரைத்து, அதில் சாம்பார் பொடி, உப்பு போட்டு மொச்சையுடன் சேர்த்து, நன்கு கலந்து கொதிக்க விடவும். மீதியிருக்கும் மொச்சையுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக நன்கு கலந்து கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இதனை சாதத்துடன் சாப்பிடலாம். தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - அரை கப், புளி - 50 கிராம், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். மணத்தக்காளி வற்றலை போட்டு, நன்றாகப் பொரிந்ததும்... சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, புளிக் கரைசலை விட்டு, பொடித்த வெல்லம், உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், கறிவேப்பிலையைப் போட்டு இறக்கவும்.

குழம்பு தண்ணியாக இருந்தால், சிறிதளவு அரிசி மாவையோ அல்லது கடலை மாவையோ கரைத்து விட்டுக் கொதிக்க விடவும்.

பச்சை மோர்க்குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கொப்பரைத் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மோர் - ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியற்றை சிவக்க வறுக்கவும். ஆறியதும் கொப்பரைத் துருவல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மோரில் அரைத்த கலவையைப் போட்டு நன்கு கலக்கவும். கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மோர்க் கலவையில் கொட்டிக் கலக்க.. அடுப்பில் வைக்காமலேயே மோர்க்குழம்பு தயார்!

கடலைக் குழம்பு

தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், புளி - 50 கிராம், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே வெள்ளை கொண்டைக்கடலையை ஊற வைக்கவும். குக்கரில் துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெள்ளை கொண்டைக்கடலையை தனியாக வேக வைக்கவும். புளியை ஊற வைத்துக் கரைத்து, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த வெள்ளைக் கொண்டக்கடலை, பெருங்காயத்தூள் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். மசித்த துவரம்பருப்பை போட்டுக் கொதிக்க விட்டு... எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

தேங்காய்ப்பால் குழம்பு

தேவையானவை: தேங்காய் துருவல் - அரை கப், மிளகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - கால் கப், கீறிய பச்சை மிளகாய் - 2, புளி, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, முதல் பால், இரண்டாம் பால் என எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில், தேங்காய் எண்ணெய் விட்டு மிளகு, கீறிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும். வேக வைத்த கடலைப்பருப்பு, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, இரண்டாம் தேங்காய்ப்பாலை விடவும். அது, கொதித்து கெட்டியாக வந்ததும் முதல் தேங்காய்ப்பாலை விட்டு, உடனே இறக்கி விடவும். கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

அப்பளக் குழம்பு

தேவையானவை: உளுந்து அப்பளத் துண்டுகள் - கால் கப், புளி - 50 கிராம், கடுகு - கால் டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பருப்பு வகைகள், பெருங்காயத்தூள், கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு வடிகட்டிய புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன், அப்பளத் துண்டுகளைப் போட்டு மீண்டும் நன்றாக கொதிக்க விட்டு, பொடித்த வெல்லம் சேர்த்து இறக்க... அப்பளக் குழம்பு தயார்.

வேர்க்கடலை காரக் குழம்பு

தேவையானவை: வேர்க்கடலை - கால் கப், தோலுரித்த சின்ன வெங்காயம் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், புளி - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், திக்கான தேங்காய்ப்பால் - கால் கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். வெறும் கடாயில், வறுக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு சிவக்க வறுத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து.. சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வாசனை வந்ததும், வேக வைத்த வேர்க்கடலை, மஞ்சள்தூள், உப்பு, புளிக் கரசைல் சேர்த்து நன்கு கலக்கவும். நன்றாகக் கொதித்ததும், அரைத்த கலவையைப் போட்டுக் கலந்து, பொடித்த வெல்லம் சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

பாகற்காய் வற்றல் குழம்பு

தேவையானவை: பாகற்காய் வற்றல் - அரை கப், புளி - 50 கிராம், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து... ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காய் வற்றலை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் இருக்கும் அதே எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், வறுத்த பாகற்காய், அரைத்த கலவை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

சுக்குப்பொடி குழம்பு

தேவையானவை: சுக்குப்பொடி - கால் கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், புளி - 50 கிராம், தேங்காய்ப்பால் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். சுக்குப்பொடி போட்டு லேசாக வதக்கி, புளிக் கரைசலை விடவும். உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு... கெட்டியானதும், தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து இறக்கவும்.

தாமரைத்தண்டு குழம்பு

தேவையானவை: தாமரைத்தண்டு - கால் கப், புளி - 50 கிராம், தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, தாமரைத் தண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, கெட்டியாகக் கரைத்து வடிக்கட்டிய புளிக் கரைசல் விட்டுக் கலந்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பொடித்த வெல்லம் போட்டு நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்க... தாமரைத் தண்டு குழம்பு ரெடி!

பக்கோடா குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், புளி - 50 கிராம், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு. எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பக்கோடாவுக்கு: கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பக்கோடாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றாகச் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து... புளிக் கரைசல், சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த துவரம்பருப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் போட்டு நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களைப் போட்டு ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கவும்.

காராமணி குழம்பு

தேவையானவை: காராமணி, தேங்காய்ப்பால் - தலா கால் கப், புளி - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 5, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - கால் கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் போட்டு வறுத்து ஆற வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். அதனுடன் வேக வைத்து, ஆற வைத்த காராமணி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு சுற்று அரைத்து, புளிக்கரைசலுடன் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்.

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை - உருண்டைக்கு: துவரம்பருப்பு - அரை கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

குழம்புக்கு: புளி - 50 கிராம், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை - உருண்டை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து அந்த மாவில் கொட்டி பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக செய்துகொள்ளவும்.

குழம்பு: 2 கப் தண்ணீரில் புளியைக் கரைத்து வடிகட்டி... அதில் சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள், வெல்லம் போட்டு அடிகனமான காடாயில் விட்டு, அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், உருண்டைகளை அதில் ஒவ்வொன்றாகப் போடவும். அவை வெந்து மேலே வந்ததும்... அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொதிக்க விடவும். அவ்வப்போது கிளறிக் கொண்டே இருந்தால், உருண்டைக்குள் உப்பு- காரம்-புளிப்பு சேர்ந்து சுவையாக இருக்கும். குழம்பு கெட்டியானதும் அடுப்பில்இருந்து இறக்கவும்.

பச்சைப்பயறு குழம்பு

தேவையானவை: பச்சைப்பயறு - அரை கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: பச்சைப்பயறை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். ஒரு கப் நீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். பச்சை மிளகாய், சீரகம், காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில், எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விட்டு, ஒன்றிரண்டாக மசித்த பயறைச் சேர்த்துக் கலக்கவும். வாசனை வந்தவுடன், அரைத்த கலவை, பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும்.

பாகற்காய் வற்றல் பொரிச்ச குழம்பு

தேவையானவை: பாகற்காய் வற்றல் - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், புளி - 50 கிராம், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு, மிளகு, எள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வறுத்து... ஆற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காய் வற்றலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அதே எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, புளிக் கரைசல், மஞ்சள்தூள், பொடித்த வெல்லம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்தெடுத்த பாகற்காய், அரைத்த கலவை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

கத்திரி வற்றல் குழம்பு

தேவையானவை: கத்திரி வற்றல் - கால் கப், துவரம்பருப்பு - அரை கப், புளி - 50 கிராம், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தண்ணீரில் கத்திரி வற்றலை அரை மணி நேரம் ஊற விடவும். குக்கரில், துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். கடாயில், எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து... புளிக் கரைசல், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு போட்டுக் கலந்து கொள்ளவும். கொதித்தவுடன், கத்தரி வற்றல், சேர்த்து வேக விடவும். வாசனை வந்ததும், வேக வைத்துள்ள துவரம்பருப்பு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கவும்.

பருப்பு உருண்டை மோர்க்குழம்பு

தேவையானவை - உருண்டைக்கு: துவரம்பருப்பு - அரை கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

குழம்புக்கு: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடைந்த மோர் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை - உருண்டை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து அந்த மாவில் கொட்டி பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

குழம்பு: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும், தயாராக இருக்கும் உருண்டைகளை அதில் போடவும். அவை வெந்ததும் மேலே வரும். பின்னர், அரைத்து வைத்திருக்கும் துவரம்பருப்புக் கலவையை சேர்த்து... அடிபிடிக்காமல் கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து கொட்டவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். மோரில் தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, உருண்டைகள் கொதித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் கொட்டி கலந்து பரிமாறவும்.

கசகசா மசாலா குழம்பு

தேவையானவை: கசகசா, துவரம்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1, புளி - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பை குழைய வேக விடவும். கடாயில், எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில், புளிக் கரைசலை விட்டுக் கொதித்ததும்... வேக வைத்த துவரம்பருப்பு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, அரைத்த கலவையை சேர்த்துக் கொதிக்க விட்டு, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பஞ்சாபி கடி

தேவையானவை: கடைந்த மோர் - 2 கப், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புளிப்பான கடைந்த மோரில் கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் தாளித்து... கடைந்த மோர் விட்டு கொதிக்க விடவும். அந்தக் கலவை கொஞ்சம் வற்றியதும் அடுப்பிலிருந்து இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

மோர் சிறிது புளிப்புடன் இருந்தால் நன்றாக இருக்கும்.

Thursday, June 10, 2010

Some More Recipes -)

பீட்ரூட்சோயா கபாப்

தேவையானவை: துருவிய பீட்ரூட், பொட்டுக்கடலை மாவு - தலா ஒரு கப், சோயா உருண்டைகள் - ஒன்றரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பிரெட் தூள் - தலா அரை கப், புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், சோம்புத்தூள் (மூன்றும் சேர்ந்த கலவை) - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோயா உருண்டைகளைக் கழுவி கொதிநீரில் போட்டு பத்து நிமிடம் கழித்து எடுத்து நன்றாகப் பிழிந்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உதிர்த்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் பீட்ரூட் துருவல், வெங்காயம், உதிர்த்த சோயா, தூள் கலவை (மிளகாய்தூள், கரம்மசாலா சோம்புத் தூள்), இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, பொட்டுக்கடலை மாவு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து எலுமிச்சை (அ) பெரிய நெல்லிக்காய் அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து உருட்டியவற்றை எடுத்து ஒவ்வொன்றாக பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Tandoori Chicken

1 to taste chat masala
6 number chicken legs
1 tsp Coriander Powder
1 tsp Cumin Seed Powder
1 tsp garam masala pdr
1 piece Ginger garlic paste
1 tsp kastoori methi (dry fenu greek leaves
1 tbsp Lemon Juice
2 tbsp oil
1 tsp Peppercorns pdr
1 tsp Red Chili Powder
1 tsp red color
1 cup Curd
1 tsp Salt
1 tsp turmeric
6 tbsp Yogurt



Chicken fried rice
i pinch ajinamoto salt
1 tsp chopped ginger garlic
3 cup cooked rice( left ove rice works best)
1/4 cup diced carrots
1/4 cup diced Celery
1/4 cup Diced chicken ( cooked)
1/4 cup diced peas
1 egg
1/2 tsp green or red chilli sauce
3 tsp oil
1 tsp pepper
2 tsp soya sauce
to taste vinegar
Take chicken but cut into small pieces and wash.

Take a bowl add chicken,pepper,salt,cornflour and mix well and add half egg and keep it a side.for marinate for 30 minutes

Now cook rice and keep it a side see that its not cooked too much.

Take a pan add oil to fry chicken, once chicken is cook transfer it to a plate, take the same pan but remove the oil, use only 1tsp of oil then add ginger,saute it for a min,add onion saute it,add egg, once it is cooked add pepper,salt,ajinamoto,vegetables,vinegar,soya sauce,chicken,saute it and lastly add cooked rice mix well.

Lastly add some spring onions and finish it off.



Tandoori chicken
1. Clean and Cut 2 or 3 long slits on each piece.
Apply salt ,chilli pdr and lime juice all over the chicken and keep aside for 15 minutes.
make marination with coriander powder, cumin powder, red chilies, kastoorimethi ,Curd,turmeric garam masala pdr red color to a smooth paste. Add 1/2 tsp salt to the paste and mix well with yogurt.
3. apply it all over the chicken, making sure to apply well between all the slits and inside
4. Preheat your oven to 425 degree Fahrenheit. Cook for 20 to 35 minutes till the chicken is tender. Remove from oven, . 5. Remove from oven and serve hot, garnished with sliced onions and lime wedges.and also can be heated on griddle if serving later



Chicken-65

1/2 tsp Aji no moto(MSG)
2 lbs Chicken-dark meat(boneless thigh meat)
1/2 bunch Coriander leaves-chopped
2 tsp Cornflour
1/2 tsp each tsp Cumin seeds, Pepper powder,chilli powder,salt
4-5 number Curry Leaves-chopped
1 number Egg
1 tsp Garlic-chopped
1/2 tsp Ginger-chopped
2 tsp Ginger/Garlic paste
4-5 number Green Chilli
to fry Oil
2-3 drops Red color(Optional)



To make the fried chicken pieces:- Take chicken pieces in a non reactive bowl-(We use dark meat so that it is nice and juicy when fried).Add salt, Aji-no-moto,1 tsp ginger/garlic paste, pepper powder-pinch, cornflour and mix-Then add 1 egg and mix in completely-(Egg coats the meat and keeps the juices in) Heat oil in a frying wok or kadhai-Add chicken pieces few at a time(Do not crowd the kadhai) and fry until lightly golden brown-Drain and remove on a paper towel To make the sauce:-This does not need to be very salty-so control salt Heat 2-3 tsp oil in a pan-Add cumin, add the chopped ginger and garlic and suate until fragrant-Add chopped chillies, curry leaves,1 tsp ginger/garlic paste, remaining pepper powder, chilli powder, salt,chilli/garlic paste, aji-no-moto, red color and mix-Cook for a few minutesAdd a little water and then add chicken to this paste and toss lightly-Stir in the coriander leaves and serve



Onion Pakoda
1/2 tsp baking pdr
1 cup big Onion
2 leaf curry leaves
1 piece Ginger finely sliced
1 cup Gram Flour Besan
2 number Green chillies
0 jeera
1 to fry oil
2 tbsp oil or butter
1/4 cup Rice Flour
1 to taste salt
Method:
in pan add besan+rice flour_salt+jera+BakingPowder+2tsp of Oilthen add onion+ginger green chilles cashew(soaked 30 mins).coriander leaves
then fry itin deep oil



Directions of Egg Curry
1 tsp chilli pdr
3 piece chopped chilli
3 number chopped onion
1 tbsp coriander pdr
1 tsp cumin
1 tsp cumin pdr
3 springs curry leaves
10 number eggs
1 tsp fenugreek leaves
1 tbsp ginger garlic paste
1 tsp mustard seeds
3 tbsp oil
1 to taste salt
100 ml tamrind juice
1 pinch turmeric
Heat oil in a vessel and mustard seeds and let them splutter. Now add methi seeds, cumin and add onions curry leaves and fry Add chopped onions and green chillies and fry till they turn light brown.

add ginger garlic paste
Now add chilli pwd, turmeric pwd, coriander pwd and cumin pwd, mix well and saute for few seconds.

Add tamarind extract and 2 cups of water and bring to a boil. Add salt and sugar and reduce heat and let it simmer for 10 mts. Add the boiled and fried eggs and let it cook in the gravy for 3minutes or till you get the required gravy consistency.
Garnish with chopped coriander leaves. Serve this hot steamed rice or rotis.

Mushroom chicken curry
kadai add oil+garam masala +onion+
paste=ginger garlic with coriander+green chilles +Tomotes
add chicken+chillipowder+coriander powder+turmeric then cook for while then add mushroom Finally add

thisPowder-paattai cloves pepper sompu(Dry roast)

Mushroom Pepper fry

Oil+Mustard+Urad Dhall+Onion +Ginger Garlic Paste+Mushroom +Pepper powder add garam masala



Palak Mushroom

In Water Add Palak+Green chilli+little Cumin bring them to boil and grind it in mixie

oil+Cumin +Chilles garlic and ginger +onion +TomotesChilli powder+coriander powder +Mushroom

Crispy Fried Chicken
Chicken
Rice flour-3small cup
Maida-2 cup
Corn flour -1cup
garlic and gingerpaste
Chilli +Coriander+Turmeric-1tsp
Curd-1 cup
Color
Lemon
Coriander leaves

Method
To chicken Add All the flour +mix everything into it add Egg If necessary
Keep it for 30 minutes

Then fry it in Deep oil


Mushroom fried Rice
Oil+Onion+Ballpepper+

Chicken Mushroom Gravy

Oil+Bay Leaves +cinammon+cloves+Somphu+green chilles+Green leaves+Onion sorted it well thenn add ginger garlic paste then add Tomoto
add turmeric and Coriander +Chilli add Chicken to it ......then add mushroomGrind the cashewnutand coconut paste to it

Egg Kabab

oil+onion+green chillies +garammasala+chillipowder+turmeric+add ginger garlic pastethenadd boiled pototo to it then boil the eggs make a batter to then add egg in to it and coat it with egg then to it bread crums and deep fry to it




தர்பூசணி கீர்
தேவையானவை: தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - 75 கிராம், கன்டென்ஸ்டு மில்க் - 5 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன் (அ) தேங்காய்ப் பால் - ஒரு சிறிய கப், குங்குமப்பூ - சிறிதளவு, பால் க்ரீம் - ஒரு சிறிய கப்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில், பால், தேங்காய்ப் பால் பவுடர் இரண்டையும் சேர்த்துக் கலக்குங்கள். அது திக்காகிவிடும். பிறகு, தர்பூசணி தவிர, மற்ற எல்லாவற்றையும் அதில் சேருங்கள். கடைசியாக தர்பூசணியைச் சேர்த்துக் கலக்குங்கள். சற்றே நீர்த்து வரும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, காலை பதினோரு மணி வாக்கில் சாப்பிடலாம்.

மாங்காய் எலுமிச்சை பானகம்

தேவையானவை: மாங்காய் - 1, கருப்பட்டி வடிகட்டிய கரைசல் - 2 கப், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், துருவிய எலுமிச்சை தோல் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 துளி.
செய்முறை: மாங்காயைத் தோலுடன் துருவிக் கொள்ளவும். கருப்பட்டி கரைசலில் எலுமிச்சை தோல் துருவல், மாங்காய் துருவல், சுக்குப் பொடி சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கினால், பானகம் தயார்.
மதியம் சாப்பிட்டு முடித்ததும் அரை மணி நேரத்துக்குப் பிறகு, இதை அருந்தலாம். மாலை ஆறு மணிக்கு மேல் குடிப்பது நல்லதல்ல.

Tips:மாங்காய், நாக்கில் எச்சிலை ஊற வைத்துக் கொண்டே இருப்பதால், தாகம் எடுக்காது. கருப்பட்டி ஜீரணத்தைக் கொடுக்கும். எலுமிச்சை தோலில் பைஃபர், விட்டமின், மினரல்ஸ் இருப்பதால், உச்சிவெயிலுக்கு ஏற்ற உற்சாக பானம்தான்

மாம்பழ தயிர் சாதம்

தேவையானவை: வடித்த சாதம் - 2 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மாம்பழ கூழ் - 50 கிராம், தயிர், உப்பு - தேவையான அளவு, காய்ச்சிய பால் - ஒரு சிறிய கப், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சாதத்துடன் எல்லாவற்றையும் கலந்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும். இந்த தயிர்சாதத்தை மதிய நேரம் சாப்பிடலாம்.

Tips: சர்க்கரை நோய் இருப்பவர்கள், தர்பூசணிக்கு பதிலாக கிர்ணிப்பழம் சேர்த்து 'திக்'காக செய்து சாப்பிடவேண்டும்.அதேபோல், மாம்பழத்தில் பீட்டா கரோட்டின், பாலில் கொழுப்பு, தயிரில் புரதம், விட்டமின்-சி, கார்போஹைட்ரேட் இருப்பதால், மாம்பழ தயிர் சாதத்தில் எல்லாச் சத்துக்களுமே கிடைத்துவிடுகிறது. உடலை குளிர்ச்சியாக்கி, நல்ல எதிர்ப்பு சக்தியையும் தரும்'

Wednesday, June 17, 2009

Samayal

DINDUKKAL BIRYANI

Wash 1/2 kg. of JEERAKA SAMBA rice and soak for 30mins. Clean 1/2 kg. mutton pieces.
Finely slice 1/4kg. of onions and chop 1/4 kg. of tomatoes. Heat 100gm. cooking oil / can also use some ghee , about 50gm.
in addition to the oil] in a heavy vessel, and splutter 2 sticks cinnamon, 2 cloves, 2 cardamom,
1 bay leaf, 1 stone algae [ kadal paasi in tamil ] and one maraati moggu.
Then add onions and saute till brown. Then add paste of 6 garlic and 50gm. ginger, and the tomatoes and cook till raw smell goes.
Then add washed mutton, 4 chopped green chillies , 1/4 tsp. turmeric powder, 2 tsp. chilli powder,
3 tsp. dhania powder, 1/2 a bundle of mint leaves, chopped,
1/2 cup thick curds, and cook till oil floats on top.
Then add water twice the amount of rice , add required salt and cook the mutton.
When the mutton is 3/4th. done, add the drained rice, mix, cover and cook.
Do not disturb till you see small pits forming on top of the biryani.
Then add little red [kesari] food colour dissolved in little water, mix well but lightly, and cook on 'dum' for half an hour.
Serve hot with regular pachadi [made with onion, Cucumber,coriander leaves, tomatoes in curd].


AAMBUR BIRYANI

BASMATHI rice - 500 gms. No kadalpasi, maratti moggu in this recipe.
The rest of the ingredients required and their quantity is the same as the above recipe. But method of cooking is different.
Method: Take 1 1/2 litres of water in a heavy pan. Add half the spices [clove,cardamom etc.]
and boil the water. Add washed rice, salt and cook till 3/4th. done and drain the water.
Set the rice aside. Meanwhile, clean the mutton. Mix it with curd, chopped tomatoes, mint leaves, coriander leaves, ginger garlic paste,
turmeric powder and slit green chillies. Mix well and marinate for at least 30 mins.
Heat the oil/ghee in a heavy pan, splutter the remaining whole spices,
and fry the onions till brown. Then add muttons and cook till oil floats on top.
Then add coriander powder and chilli powder, salt, and sufficient water to cook the meat.
Once the mutton is cooked, and the mixture thickens,
add the cooked rice, mix well and cook the biryani on 'dum' for 30mins.
Serve hot with regular Curd pachadi [made with onion,Cucumber, coriander leaves, tomatoes in curd
PONGAL - VADAICURRY

Pongal :
Wash 1 cup raw rice and 1/2 cup mung dal. Add 2 1/2 cups water, salt, a pinch of cumin seeds and cook in pressure cooker for 1 whistle.
Then reduce flame & cook for a further 10mins. Remove from stove, add 1/2 tsp. asafoetida powder, mix well and set aside.
Heat 1 tsp. oil and 2 tsp. ghee in a pan, and splutter 1tsp. cumin seeds, 2 tsp. pepper corns,
1 small piece of giner [finely grated], 5 cashewnuts broken and a few curry leaves.
Add this seasoning to the cooked rice, mix well and serve hot.

Vadaicurry:
Grind together 1 small piece ginger, 8 garlic, 1tsp. fennel seeds, 3 red chilly, 1 piece cinnamon, 1 clove and 1 cardamom to make a thick paste.
Soak 1 cup chana dal for 1 hour and grind to a coarse paste, adding as little water as possible.
To this dal paste, add 1 Tbsp. of the ground masala paste, required salt and mix well.
Make small vadais and fry in hot oil. Keep aside. In a pan, heat some oil and saute 2 chopped onions till brown.
Then add 2 chopped tomatoes, the ground masala paste, 1tsp.each of chilli powder & coriander powder, 1/2 tsp. turmeric powder and saute well.
Then add 1 cup of coconut milk and bring to a boil. Break up the fried vadais into bite-size pieces,
add to the gravy, mix well & taste for salt. Add little water if gravy is too thick, bring back to the boil , switch off stove. Serve hot with pongal
KEERAI VADAI

Soak together 1/2 cup whole urad and 1 cup chana dal for 2 hour.
Drain, grind to a coarse thick paste, without adding any water.
Finely chop 1/2 cup small onions, 3 green chillies and 1/2 a bundle of arai keerai or siru keerai [or a combination of both].
Add these to the ground dal alongwith required salt & 1tsp. cumin seeds.
Add finely chopped curry leaves and coriander leaves, mix very well. Heat oil for frying in the pan.
Take a small ball of the vadai dough, place it on the palm, flatten to make thin vadais,
press center with a finger and slowly drop the vadais in the oil. Fry on a medium flame till done.
Don't overcrowd the pan, only add as many vadais as the pan will hold.
--------------------------------------------------------------------------------

MUTTON CHUKKA

Clean 250gm. boneless mutton & chop into small pieces. Heat 1 ladle of oil in a pan & splutter 1/4 tsp. fennel seeds.
Then add 100gms. chopped small onions and saute till brown. Then add 1/2tsp. ginger garlic paste , and when it's raw smell goes, add 50 gms. of chopped tomatoes.
Then add 2 tsp. chilli powder, 3 tsp. coriander powder & 1/4 tsp. turmeric powder & cook on medium flame till oil separates from the masala.
Then add cleaned mutton , required salt, mix well. Cook , sprinkling little hot water from time to time. Once mutton is well cooked and all moisture is evaporated,
remove and serve garnished with chopped coriander or curry leaves as desired.

AKKARA VADISAL

Boil 1litre of milk, add 1 cup water , 1 cup raw rice, 1/4 cup mung dal &
1/4 cup chana dal. Mix well & cook them on a medium steady flame till cooked very soft and fine.
Meanwhile, place 2 1/2 cups of powdered jaggery in a pan, add 1/4 cup water and heat.
Once it boils, remove from stove , strain & set aside. Once the rice/dal mixture is cooked very well,
add this jaggery syrup and mix & cook well till moisture completely reduces. Heat 1/2 to 3/4 cup of ghee in a pan,
add 10 broken cashews and roast them till light brown. Then add 1tsp. cardamom powder, mix &
add this tempering to the jaggery & rice mixture. Mix thoroughly, leave covered for 20mins. Then serve hot.


-------------------------------------------------------------------------------

RAMANATHAPURAM AINDHARISI PANIYARAM

Wash & soak together 1/2 cup each of pacharisi,
puzhungal arisi, javvarisi [sago], whole urad & mung dal for 2 hrs.
Grind to a smooth batter adding 2 Tbsp. of grated coconut.
Powder 2 1/2 cups of jaggery, place in a pan and add water just to cover the jaggery.
Heat until the jaggery melts, then strain to remove the dirt & add this jaggery syrup to the ground batter.
Add 2tsp. of powdered cardamom, mix well and make paniyarams in a small kadai , as mentioned in previous recipes.



KANCHIPURAM IDLY

Clean & soak together 1/2 cup boiled rice, 1/2 cup raw rice & 1cup whole urad for 1 hour,
grind to coarse rava consistency. Add salt & set aside to ferment for 5hrs. Heat 3 Tbsp. oil and pour 1 spoon oil into the fermented batter,
mix well. In the remaining hot oil, splutter 1tsp. each of mustard, urad dal, crushed cumin, crushed pepper, 2tsp. chana dal,
1small piece ginger grated, 5 - 6 cashews broken and 3 dry red chillies split into bits. Add this seasoning to the batter.
Also add 2Tbsp. grated coconut , mix the batter thoroughly but lightly. Grease small steel tumblers and pour batter upto just 1/2 the tumbler.
Steam idlies on medium flame as usual, for 10mins. [ Can check if they are done by piercing centre of idlies with a sharp wooden skewer/stick ].
Serve hot with chutney / sambar.


KARI [MUTTON] KOZHAMBU

Clean 1/2 kg. mutton & chop into pieces. Grind together 2Tbsp. grated coconut,
2 tsp. of khasakhasa [poppy seeds] & 5 cashews to a fine paste. Heat 2Tbsp. oil in a pan, and splutter 1tsp.
of fennel and 2 nos. each of cloves, cardamom & cinnamon. Add 100gms. of small onions, finely chopped and fry till light brown.
Then add mutton, 4 tomatoes chopped, 3tsp. chilli powder, 2 tsp. ginger garlic paste, 1 1/2tsp. coriander powder, 1/4 tsp. turmeric powder, stir well.
Cook till raw smell goes. Then add 3 cups water, reduce heat, cover the pan & cook the mutton well. Then add salt, boil for 5 more mins.
Add ground paste and after a further 5 minutes, remove from the stove. Garnish with curry leaves, serve hot.

Friday, June 5, 2009

பூசணி-பரங்கிக்காய் சமையல் !

பரங்கிக்காய் ஓலன்
தேவையானவை:
பரங்கிக்காய் - கால் கிலோ, தேங்காய் எண்ணெய், கொப்பரைத் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பரங்கிக்காயை வறுவலுக்கு சீவுவது போல சீவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் சீவிய பரங்கிக்காயைப் போட்டு உப்பு, கொப்பரைத் துருவல் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி இறக்கவும்.
மணக்கும் இந்த மலையாள சமையல்.
--------------------------------------------------------------------------------
பூசணிக்காய்- மோர்க்குழம்பு
தேவையானவை:

பூசணிக்காய் - அரை கிலோ, தயிர் - ஒரு கப், மிளகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, தேங்காய் துருவல் -ஒரு கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - கால் டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு.

செய்முறை:

பூசணிக்காயைத் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, தேங்காயை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். பூசணித் துண்டுகளில் உப்பு சேர்த்து வேக விடவும். தயிரை நன்றாகக் கடைந்து, அரைத்த தேங்காய் விழுது, பூசணித் துண்டுகளைச் சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
இந்தக் குழம்புக்கு உருளைக்கிழங்கு பொரியல் நல்ல காம்பினேஷன்.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் பால் கூட்டு
தேவையானவை:

பரங்கிக்காய் - ஒரு சிறிய துண்டு, வெல்லம் - 100 கிராம், தேங்காய் துருவல், பால் - தலா ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். தேங்காய் துருவலை அரைத்து, அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு, பால் விட்டுக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.
பாலும் வெல்லமும் சேர்ந்து வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்தக் கூட்டு. இது, சாம்பார் சாதத்துக்கு ஏற்றது.
--------------------------------------------------------------------------------
பூசணி தயிர் பச்சடி
தேவையானவை: பூசணிக் கீற்று - 2, தயிர், கேரட் துருவல், வெள்ளரித் துருவல் - தலா ஒரு கப், உப்பு - தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.


செய்முறை:
பூசணிக்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். தயிருடன் துருவிய கேரட், வெள்ளரி, கொத்தமல்லி, உப்பு, பூசணித் துருவலைப் போட்டு நன்றாகக் கலக்கவும்.
இது, கோடைக்கேற்ற குளிர்ச்சியான பச்சடி. உடல் சூட்டைக் குறைக்கும்.
--------------------------------------------------------------------------------
பூசணிக்காய் பொரித்த கூட்டு
தேவையானவை:

பூசணிக்காய் கீற்றுகள் - 4, காய்ந்த மிளகாய் - 1, சீரகம் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், தனியா - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:
பூசணிக்காயை தோல் சீவி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல், தனியாவைப் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைத்து, பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதனுடன் வேக வைத்த பூசணிக்காயை சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
பருப்பு சேர்க்காத பத்தியக் கூட்டு இது. இதற்கு சுட்ட அப்பளம் சூப்பராக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் அடை
தேவையானவை
:

புழுங்கல் அரிசி - 200 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மிளகு - 6, காய்ந்த மிளகாய் - 2, தக்காளிப்பழம் - 1, பரங்கிக்காய் (தோல் சீவி துருவியது) - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப் பருப்பு, துவரம்பருப்பை தனியாக ஊற வைக்கவும். அரிசியை அடை மாவு பதத்தில் அரைக்கவும். ஊற வைத்த கடலைப் பருப்பு, துவரம்பருப்பில் இஞ்சி, மிளகு, தக்காளி, காய்ந்த மிளகாயை சேர்த்து அரைக்கவும். இந்த மாவில் அரைத்த அரிசி மாவு, உப்பு சேர்த்துக் கலந்து, பரங்கிக்காய் துருவல், கறிவேப்பிலை சேர்க்கவும். தோசைக்கல்லை காய வைத்து மாவை அடையாக ஊற்றவும். இரு புறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
இந்த அடை, தித்திப்பு கலந்த அட்டகாசமான சுவையில் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
பூசணிக்காய் சாலட்
தேவையானவை:

பூசணிக்காய் - அரை கிலோ, முளை கட்டிய பாசிப்பயறு - ஒரு கப், வெள்ளரிக்காய், கேரட் - தலா 1, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை:


பூசணிக்காய், கேரட், வெள்ளரிக்காயை துருவிக் கொள்ளவும். முளைகட்டிய பயறுடன் துருவிய காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி போட்டுக் கலந்து பரிமாறவும்.
வெயிலுக்கு ஏற்ற ஜில் சாலட் இது.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் இனிப்புப் பச்சடி


தேவையானவை:

பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் - ஒரு கப், புளிக் கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன், அச்சு வெல்லம் - 3, பச்சை மிளகாய் - 1, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பரங்கிக்காய் துண்டுகளில் புளிக் கரைசல், உப்பு சேர்த்து வேக விடவும். வெல்லத்தைப் பொடித்துப் போட்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து, கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
இனிப்பு, புளிப்பு, காரம் என கலந்துகட்டி ருசிக்கும் இந்தப் பச்சடி.
--------------------------------------------------------------------------------
பூசணிக்காய் கீர்
தேவையானவை:
பூசணிக்காய் கீற்று - 2, பால் - ஒரு கப், பாதாம் பருப்பு - 4, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை - அரை கப்.

செய்முறை:
பூசணிக்காயைத் தோல் சீவி நறுக்கி, வேக விட்டு அரைக்கவும். இதனுடன் பாதாம் பருப்பையும் தோல் உரித்து சேர்த்து விழுதாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆற வைத்து, அதில் அரைத்த விழுதைப் போடவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
பூசணிக்காய் கீர் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் பாயசம்
தேவையானவை:
பரங்கிக்காய் கீற்று - 2, வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் -சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 10, பால் - ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

பரங்கிக்காயைத் தோல் சீவி, பொடியாக நறுக்கி, நெய் விட்டு வதக்கி அரைக்கவும். இதில் வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆறியதும் கொதிக்க வைத்த பரங்கிக்காயில் சேர்த்து ஏலக்காய்த்தூளைப் போடவும். சிறிது நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து சேர்க்கவும்.
பண்டிகை நாட்களுக்கேற்ற புதுமையான பாயாசம் இது.
குறிப்பு: இதில் தேங்காய்ப்பாலை சேர்த்தும் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் காரக்குழம்பு
தேவையானவை:
பரங்கிக்காய் துண்டுகள் - ஒரு கப், புளி - நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளிக்கவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சாம்பார் பொடியைப் போட்டு லேசாக வறுக்கவும். புளியைக் கரைத்து விடவும். பரங்கிக்காய், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சூடான சாதத்துடன் பிசைந்து, சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------

பூசணி தாளிப்பு மோர்
தேவையானவை: பூசணிக்காய் கீற்று - 1, தயிர் - ஒரு கப், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: பூசணிக்காயை துருவிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயுடன் தயிர் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, பெருங்காயத்தூள், உப்பு, கொத்தமல்லி, துருவிய பூசணிக்காயைப் போட்டுக் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து அருந்தவும்.
உடல் சூட்டைத் தணிக்கும் இந்த தாளிப்பு மோர்.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் போளி

தேவையானவை:
மைதா மாவு, பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், பரங்கிக்காய் கீற்று - 2, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - தலா ஒரு சிட்டிகை, கடலைப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், நெய் - அரை கப்.

செய்முறை:
மைதா மாவுடன் கேசரி பவுடர் சேர்த்து, நல்லெண்ணெய், சிறிது தண்ணீர் விட்டு, நன்றாகப் பிசையவும். பரங்கிக்காயைத் தோல் சீவி நறுக்கி, நெய் விட்டு வதக்கவும். கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அரை மணி நேரம் ஊற வைத்து வேக விடவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு, தேங்காய்த் துருவல், வேக வைத்த கடலைப்பருப்பு, பரங்கிக்காய், வெல்லம் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணம் பதத்தில் கிளறவும்.
ஒரு வாழை இலையில் நெய் தடவி, பிசைந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி, குழவியால் வட்டமாக இடவும். உள்ளே பூரணத்தை சிறு உருண்டையாக உருட்டி வைத்து, போளியாக தட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கல் காய்ந்ததும் போளியைப் போட்டு, இருபுறமும் நெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
படுருசியாக இருக்கும் பரங்கிக்காய் போளி.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் துவையல்

தேவையானவை:
தோல் சீவி, பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பரங்கிக்காயை எண்ணெய் விட்டு வதக்கி, தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதனுடன் வதக்கிய பரங்கிக்காய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, இந்தத் துவையலைப் பிசைந்து சாப்பிடலாம்.
தயிர் பச்சடி இதற்கு டக்கரான சைட் டிஷ்.
--------------------------------------------------------------------------------
பரங்கி-பூசணி அவியல்
தேவையானவை: பரங்கிக்காய் கீற்று, பூசணிக்காய் கீற்று - தலா 1, தேங்காய் துருவல் - ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு, தயிர் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
பரங்கிக்காய், பூசணிக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக விடவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து, தயிர் சேர்த்து, வெந்த பூசணிக்காயுடன் கலக்கவும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
--------------------------------------------------------------------------------
பூசணி பருப்பு உசிலி
தேவையானவை: பூசணிக்காய் கீற்று - 2 (துருவிக் கொள்ளவும்), துவரம்பருப்பு - அரை கப், எண்ணெய் - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்பை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். பருப்பு வெந்து உதிர் உதிராக வரும். இதில் பூசணிக்காய் துருவல் சேர்த்து, 10 நிமிடம் கிளறி இறக்கவும்.
மோர்க்குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ள உகந்தது இந்த உசிலி.

--------------------------------------------------------------------------------
தக்காளி-பரங்கி-பூசணி வெஜ் சூப்
தேவையானவை: பரங்கிக்காய் துருவல், பூசணிக்காய் துருவல் - தலா ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - 1, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, நெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தக்காளியை வேக வைத்து மசித்து, தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, பூசணி துருவல், பரங்கிக்காய் துருவல், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, தக்காளி கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டு, நறுக்கிய கொத்தமல்லியைப் போட்டு இறக்கவும்.
குறிப்பு: இதில் வெள்ளரி, கேரட்டையும் துருவி சேர்க்கலாம்.

Fish names in Tamil

Kilanga Meen - Whit fishKola
Meen - Saw,
Gar fishKerai-Yellowfin
TunaKendai-Indian goat fish ,
carpKanawai-Cuttle fish
Kelluthi-Marine
cat fishKondal-Snapper
Koduvai-Seabass
Kanagnkelluthi-Indian Mackerell
Viral Meen - Butter fish,
murrelVaalai-ribbon fish
Vilongu-eel
Vavwall -Pomfret
Vanjaram Meen -King fish,
Seer fish
Sankara Meen - Red Snapper
Seepu Thiratai-Spade fish
Seela/Sheela
Meen -Barracuda.
Soorai-Little TunnySura-Shark
Iraal-shrimp
Nethili Meen-Anchovies
,maththi or chaala
Malabar trevally - Parai
Ooli meen-Barracuda
Oosi kanawai-Squid
Thera (variety of parai)-Leather skin
Thirukkai-Whip tail sting ray
Tuna-soorai
Potha-lndian Halibut
Panna-Cod

Thursday, May 14, 2009

லலிதா நவரத்தின மாலை

ஞான கணேசா சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரோ சரணம் சரணம்
ஞானா னந்தா சரணம் சரணம்

காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்சேர்க்கும்
நவரத்தின மாலையினைக்காக்கும் கணநாயக வாரணமே

ஐந்து அறங்களையும் நன்கு புரியும் நலம் பூக்கும் சிரிப்பினையுடைய புவனேஸ்வரியின் மேல் இயற்றப்படும் இந்த நவரத்தின மாலை நூல் நன்கு அமைய கணநாயகனான யானை காக்குமே.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா
ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா
ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா
ஜெய ஓம் லலிதாம்பிகையே

1. வைரம்
கற்றும் தெளியார் காடேகதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில்
அவம்பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கெமனாக எடுத்தவளேவற்றாத
அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


கற்க வேண்டிய நூற்கள் பலவும் கசடறக் கற்றப் பின்னும் அப்படிக் கற்றவர் தெளிவு பெறவில்லையாம். உலக இன்பங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு காட்டிற்குச் சென்று அதுவே கதியாய் இருந்து கண் மூடி நீண்ட நாட்கள் பெருந்தவம் செய்து தவவலிமை பெற்றவர்களும் தெளிவு பெறவில்லையாம். அவர்கள் நிலையே அப்படி இருக்க மிகத் தாழ்ந்த பிழைகள் பலவும் புரியும் ஏதாவது பேசவும் முடியுமோ? வயிரத்தால் செய்த படைவாளினை மிக வலிமை மிக்க பகைவர்களுக்கு எமனாகப் பற்றி எடுத்தவளே. அடியவர்களுக்கு என்றும் வற்றாத சுனையைப் போல் அருள் புரிபவளே. மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

2. நீலம்

மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத்திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


மூலாதாரமெனும் சக்கரத்தில் ஒளிரும் குண்டலினி எனும் தீயே சரணம் சரணம். முடிவும் முதலும் ஆனவளே; முடிவும் முதலும் அற்றவளே சரணம் சரணம். அழகிய கிளியே சரணம் சரணம். என்றும் குறையாத ஒளிக்கூட்டமே சரணம். உன்னுடைய நீலத் திருமேனியையே தியானித்து மற்ற நினைவுகளே இன்றி அடியேன் நின்றேன். பாலா திரிபுரசுந்தரி எனும் வாலைக்குமரியே என் முன் வருவாய் வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

3. முத்து

முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்தத்தேறிய நான்
தனயன் தாய் நீசாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கினை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


முப்பெரும் தேவர்களும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களும் குறைவறச் செய்யும் வண்ணம் அவர்களுக்கு அருளும் முதல்வியே சரணம். எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் விதையானவளே; அந்த விதையிலிருந்து விளைந்த எல்லாமும் எல்லாரும் ஆனவளே; சரணம் சரணம். வேதங்களின் முடிவான வேதாந்தமாம் உபநிடதங்களில் நிலைத்து வாழ்பவளே. உன்னிடம் தஞ்சம் என்று அடைந்த நான் உன் மகன்; நீ என் தாய். என்றும் அழியாத வரத்தை எனக்கருளவே வருவாய். மத்தில் அகப்பட்ட தயிரைப் போல் நான் அங்கும் இங்குமாக அலையும் வாழ்வை அடையாமல் என்றும் அழியாத வாழ்வை அருள்வாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.தத்தேறிய நான் - உன்னிடம் தத்தாக வந்த நான்; தஞ்சமாக வந்த நான்.

4. பவளம்

அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோர்
தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிருந்தாள்
மந்திர வேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே



அந்தி வானம் அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை.
சிந்தை நிரம்பும்படி, மகிழும் படி வளம் பொழிந்து இந்த உலகத்தை (பாரை) ஒரு தேன் காடாக இங்கே செய்தவள் யாரோ? அன்னையே! என் தந்தையாம் இறைவரின் இடப்பாகத்திலும் அவர் தம் மனத்திலும் / என் மனத்திலும் இருப்பாள். அவளை எப்போதும் எண்ணுபவர்க்களுக்கு என்றும் அருளும் எண்ணம் மிகுதியாகக் கொண்டாள். மந்திரங்கள், வேதங்கள் இவற்றின் உட்பொருளாவாள். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

5. மாணிக்கம்

காணக் கிடையா கதியானவளேகருதக்
கிடையாக் கலையானவளேபூணக்கிடையாப்
பொலிவானவளேபுனையக் கிடையாப்

புதுமைத்தவளே நாணித்திரு நாமமும் நின்
துதியும் நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதாஜெய ஓம் லலிதாம்பிகையே


எளிதில் காணக்கிடைக்காத நற்கதியானவளே! எண்ணத்தில் எளிதில் கருத முடியாத கலை வடிவானவளே! அணிவதற்கு அரிதான அழகு அணியானவளே! கற்பனைக்கும் எட்டாத புதுமையானவளே! இவற்றை எல்லாம் செய்ய முயன்று முடியாமல் தம் குறைப்பாட்டை எண்ணி நாணி உன் திருநாமங்களையும் உன் துதிகளையும் யார் நவிலவில்லையோ அவர்களை நாடாதவளே! மாணிக்கத்தின் ஒளிக்கதிரானவளே! வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

6. மரகதம்


மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதிலயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதாஜெய ஓம் லலிதாம்பிகையே


பச்சை மரகத உருவையுடையவளே சரணம் சரணம். தேன் பொழியும் திருவடிகளை உடையவளே சரணம் சரணம். தேவர் தலைவன் உன் பாதங்களைப் பணிய திகழ்ந்திருப்பாய் சரணம் சரணம். சுதி, ஜதி, லயம் போன்ற இசை உறுப்புகளாய் இசைவடிவானவளே சரணம். ஹர ஹர சிவ என்று அடியவர் பாடிக் கொண்டு குழும அவர்கள் இறைவரின் அருள் பெறும் படி அருள் புரியும் அமுதமானவளே சரணம். ஒன்பது வித செல்வங்களானவளே சரணம் சரணம். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

7. கோமேதகம்


பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மரமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


பூமியில் பிறந்த நான் புரியும் எல்லா செயல்களும் எந்த வித குறைகளும் இல்லாமல் எல்லா பயன்களும் குறைவின்றி கிடைக்கும் வரமும், தியிலிட்டுப் பொசுக்கினாலும் 'ஜெய சக்தி' என்று உன் அருளில் உறுதி கொண்டு அடியேன் சொல்லும் வீரமும், தாயே நீ வந்து தருவாய். மோமேதகமே! குளிர் வான் நிலவே! குழலைப் போல் இனிய வாய்மொழியைக் கொண்டவளே! மாமேரு மலையில் வாழும் கிளியே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

8. பது மராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராகவிகாஸ வியாபினி அம்
பாசஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதாஜெய ஓம் லலிதாம்பிகையே


இன்பம் அருள்பவளே! இன்ப வடிவே! அழகிய கண்கள் உடையவளே! பதுமராகத்தின் ஒளியில் நிறைந்தவளே! அம்மா! நிலையில்லா மன நோய்களை நீக்குபவளே! அனைத்துக் கலைகளையும் அறிந்தவளே! சம்புவின் சக்தியே! நிலவை அணிந்தவளே! தலைவியே! கருநிறத் திருமேனியைக் கொண்டவளே! எல்லா வித அணிகலன்களும் அணிந்திருப்பவளே! மரணமிலா பெருவாழ்வின் உருவே! என்றும் மங்கலகரமானவளே! அழகிய மேருமலை சிகரத்தில் நிலைத்து வசிப்பவளே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

9. வைடூர்யம்

வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையாரொலி யொத்த விதால்
நிலையற் றெளியேன் முடியத்தகுமோநிகளம்
துகளாக வரம் தருவாய்அலையற் றசை
வற் றநுபூதி பெறும்அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


நான் செய்த முன்வினைப்பயன்களோ வலையை ஒத்தது. என் மனமோ மானைப் போன்றது. அந்த மான் மருளும் படி அறையும் பறை போன்றவை உலக இன்ப துன்பங்கள். இப்படி வினை வயப்பட்டு இன்ப துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டு மானைப் போல் என் மனம் நிலையற்று எளியேன் அழிந்துப் போகலாமோ? இது தகுமோ? இவையெல்லாம் தூளாகப் போகும் படி வரம் தருவாய். அலைவற்று அசைவற்று இறை அனுபவம் பெறும் அடியார்களின் திருமுடியில் வாழும் வைடூரியமே! மலையத்துவச பாண்டியன் மகளே! மீனாட்சியே! வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே. பயன் எவர் எத்தினமும் இசையாய் லலிதாநவரத்தின மாலை நவின்றிடுவார்அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்சிவரத்தினமாய் திகழ்வா ரவரே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

எவர் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வா ரவரே (மாதா)

ஓம் கணேசா

ஸ்வர்ண காமாக்ஷி

வேத வேத ரூபிணி, வேதம் பாடும் மாமணி
நாதமான கீதமும் நாடுகின்ற நல்மணி
மாதவத்தின் சக்தி நீ, மாரன் பாடும் மாலினி
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ

மங்களத்தின் நங்கையே, மதியணிந்த மங்கையை,
பொங்குகின்ற கங்கையே, பொன்னியான மங்கையை,
எங்குமுள்ள சங்கைதீர எண்ணுகின்ற மங்கையே,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ

துன்பமான வாழ்வொளி, இனிய ஞான பேரொளி,
அன்பு ஆன உள்ளொளி, அழகில் ஞான பேரொளி,
துன்பம் ஓட்டும் தூயொளி, துரிய ஞான பேரொளி,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ

காலை மாலை இரவும் நீ,காஞ்சி தந்த வாழ்வு நீ,
வேலை வென்ற விழியவன் வேண்டி வந்த வாழ்வு நீ,
சோலை தந்த மலரும் நீ, சோகமற்ற வாழ்வு நீ,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ

கரும்பு வில்லும் ஏந்தினாள், கவலை தீர்க்க ஆடினாள்,
விரும்புகின்ற மொழியினாள், விண்ணை ஆளும் விழியினாள்,
பருவமாகி முகிலுமாகி பயிருமான விழியினாள்,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ

தஞ்சை வந்த தாயவள், தகைமை தன்னை பாடுவார்,
பஞ்சமற்ற வாழ்வொடு, பண்பு மிக்க மகவொடு,
மஞ்சளோடு திலகமும், மணம் மிகுந்த மலரொடும்,
விஞ்சுகின்ற புகழொடும், விண்ணும் மண்ணும் ஆளுவார்
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ


Sunday, May 10, 2009

Sura puttu - King Fish South Indian Style

Sura puttu (King Fish )- Preparation : South Indian Style